பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்: ஜூலை 16 முதல் பெறலாம்


கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் 16 -ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு கடந்த மே 15 -ஆம் தேதி
கல்வித் துறை இணையதளத்திலும், மே 17 -ஆம் தேதி அன்று அவரவர் பள்ளியிலும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் ஜூலை 16 -ஆம் தேதி காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.