15.07.2018 ஞாயிறு அன்று பள்ளிகளுக்கு வேலை நாள்?
தற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.

தேசிய விழாக்களில் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில்  மட்டுமே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும்  ஆனால் இயக்குநர் உத்தரவு படி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்காகவே தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை (14.07.2018) விடுமுறையை ரத்து செய்து பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் உரிய உத்தரவோ இயக்குநர் செயல்முறைகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை பள்ளி வேலை நாள் கிடையாது. நாளை (14 .07 .2018) பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்த படுகின்றது. நிகழ்ச்சிகளை ஆவணம்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.