ஆசிரியர்கள் இரு வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவு! இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை!! 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க இயலாது​! கல்வி அமைச்சர் செங்கோட்டையன்


Biometric முறையில் ஆசிரியர்கள் வருகைப் பதிவு முறையில் காலை, மாலை என இரு  வேளையும் biometric முறையில் விரல் ரேகைப் பதிவிட வேண்டும்.

இதற்கென DPI வளாகத்தில் கட்டுப்பாடு அறை அமைக்கப்பட்டு அனைவரின்
வருகைப்பதிவும் கண்காணிக்கப் படும்.

Biometric machineற்கு மின் இணைப்பு மட்டும் இருந்தால் போதும். காவல்துறை wireless போன்று பிரத்யேகமான அலைக்கற்றை மூலம் அவைகள் இணைக்கப்படும்.

அதனால் மலைப் பள்ளிகளில் செல்போன் சிக்னல் இருக்க வேண்டிய அவசியமில்லை.

மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்துமே மாற்றி அமைக்கப்படும்.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க இயலாது

தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி சேர்த்து வருகின்றனர்

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் நிலை குறித்து நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளில் மாணவர்களின் விவரங்கள் இணைக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தகவல்அளித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், இரத்த வகை, தொலைபேசி எண் ஆகிய விவரங்கள் இணைக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்​.

மேலும் மாணவர்களின் வருகைப்பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும்  எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெவித்துள்ளார். இதுகுறித்து விரைவில் செயல்படுத்தப்படும் எனவும், இது மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் கூறினார்​.