`தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும்' - சிங்கப்பூர் அரசு அறிவிப்பு!


சிங்கப்பூரை உருவாக்கியதிலும், அதன் மேம்பாட்டிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது. அதனால்தான் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. அந்நாட்டுப் பள்ளிகளிலும் தமிழ்
பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், அந்நாட்டு கரன்சியில் ஆங்கிலம், சீனா, மலாய் மொழிகளுக்கு அடுத்தபடியாக  தமிழ் மொழியும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும் என அந்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

தமிழ்ச் சமூகம் மற்றும் நவீன சிங்கப்பூர் உருவாக்கத்தில் தமிழர்கள்' என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட ஈஸ்வரன் நேர்காணல் குறிப்பில்  ``சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும். தமிழ் மொழிக்கு ஆதரவு அளிப்பதில் சிங்கப்பூர் அரசு தெளிவாக உள்ளது. ஆனால், இதைச் செயல்படுத்துவது தமிழர்கள், குறிப்பாகத் தமிழ் இளைஞர்கள் கையில்தான் உள்ளது. தமிழை அவர்கள் தங்கள் வாழ்வின் அங்கமாகக் கொள்ள வேண்டும். ‘தமிழர்கள்  திருவிழாஉள்ளிட்டவை இதற்கு உதவும்" என்றார்.