அரசின் EMIS App இன்று வரை வெளியிடப்படவில்லை : வீண் பகிர்வுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்!

கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையின்
கீழ் மாணவ மாணவியருக்கான அடையாள அட்டை வழங்கும் பணி தற்போது
வரை செயலாக்கத்தில் மட்டுமே உள்ளது.

மாணவர்களின் தற்போதைய புகைப்படங்களை நேரடியாகச் சூட்டிகை பேசிகளின் வழியே எடுத்து பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் அடையாள அட்டை செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்ட செயலியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து ஆசிரியர்களை வீண் மன மடிவிற்குள் இட்டுவருகின்றனர்.

அரசு அதிகாரப் பூர்வ முழுமையான செயலியை இன்று வரை (18.12.2017) வெளியிடாத சூழலில் இது போன்ற தவறான பதிவுகளை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.

முழுமையான தரவுகள் அடங்கிய அடையாள அட்டை செயலி (EMIS ID CARD APP) இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் வகையில் சோதனை முயற்சிகளை மாநில EMIS அணி துரிதப்படுத்தி வருகிறது.

_நன்றி : திரு.தாமரைச்செல்வன்,

State EMIS Team_