நீட் தேர்வை வருடத்திற்கு இருமுறை நடத்த திட்டம்!!!

நீட் தேர்வை வருடத்திற்கு இரண்டு முறை நடத்த  திட்டமிட்டுள்ளதாக மத்திய
அரசு தெரிவித்துள்ளது.​


மக்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் உபெந்திர குஷ்வாஹா (Updendra Kushwaha) இந்த தகவலை தெரிவித்தார். அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.