தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்


தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 
தெரிவத்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய பாடத்திட்டத்தில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என தெரிவித்தார்.


மாணவர்களை எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு பாடத்துடன் நற்பண்புகளை கற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிகளில் உளவியல் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.