தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, அவர்களது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் ஏற்படும்
சந்தேகங்களுக்கு எளிதில் விடைபெறும் பொருட்டு பதிலளிக்க புதிதாக ஐந்து தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது, 25300336, 25300337, 25300338, 25300339 மற்றும் 25300340 அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைப்புகள் தவிர, 25332833, 25338855 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி இணைப்பான 1800 425 1002 ஆகிய எண்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருங்கிணைந்த சார்நிலைப்பணியாளர் தேர்வு 4 (தொகுதி 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர்) தேர்விற்கு விண்ணப்பித்தல் தொடர்பான ஐயப்பாடுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.