750 தனி ஊதியத்தை பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து பெற்றவர்கள் கூறும் கருத்து:*

2011 ல் அனுமதிக்கப்பட்ட 750 என்பது தனி ஊதியம். அது தர ஊதியம் அல்ல. பதவி உயர்வின் போது Grade pay difference கணக்கில் கொள்ளப்படுவது
நடைமுறை. 750 என்பது Grade pay அல்ல, எனவே 750 தனி ஊதியத்தை, தர ஊதிய வித்தியாசத்தை கணக்கிடும்போது கணக்கில் கொள்வது நடைமுறை அல்ல. தனி ஊதியத்தை அதற்குரிய விதிப்படி பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்ப்பது விதிகளின் படி சரியானதே.2011 க்கு முன்பு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு இதனால் ஊதியம் குறைவு என்ற நிலைக்கு, இந்த தனி ஊதியத்தை 2006 லிருந்து நடைமுறைப்படுத்த உரிய வகையில் கோரிக்கை வைக்க முயற்சிக்கலாம். அதற்கு மாறாக தனி ஊதியத்தை, பதவி உயர்வில் grade pay difference கணக்கீட்டில் சேர்த்து கணக்கிட்டு, அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கக் கூடாது என குமுறுவதால் ஒரு பயனும் இல்லை.கூடுதலாக ஒரு சந்தேகம்...

இந்த தனி ஊதியத்தை 2006 ல் இருந்தே தற்போது வழங்குவதாக உத்தரவு வந்தால், 2011 க்கு முன்பே பதவி உயர்வில் சென்றவர்கள் இந்த தனி ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம் என சொல்வார்களா அல்லது நிதிச்சுமை கருதி விட்டுவிடுவார்களா?*நமக்குக் கிடைக்க என்ன வழி என பார்ப்பதே பயனளிக்கும். ஐயோ அவனுக்கு கிடைத்ததே, இவனுக்கு கிடைத்ததே என அலைமோதுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

Mr.Thomas Rockland-trichy