டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?

புதுடில்லி: டிச.,31க்குள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற தகவல்
வெளியாகியுள்ளது.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பான வழக்கு கடந்த வாரம் சுப்ரீம் கோட்டில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி வரையில் அவகாசம் தர தயார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதே போல் ஆதார் எண்ணுடன் பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மார்ச் 31ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


இந்த நிலையில் ஆதார் வழங்கும் தனித்துவ அடையாள ஆணைய அதிகாரிகள், வங்கிக்கணக்குகளுடன் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.