*ஓய்வூதிய உரிமை மீட்பு உணர்வை உரமூட்டிட 27.12.2017 அன்று திண்டுக்கல்லில் ஒருங்கிணைவோம்!*

பணி ஓய்வுக்கால பணப்பலனை முற்றாய் மறுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தினை முற்றாய் நீக்கி,

பன்னெடுங்காலமாகப் பெற்றுவந்த ஓய்வூதிய உரிமையை மீட்டெடுக்க,


அரசு ஊழியர் & ஆசிரிய இயக்கங்கள் கூட்டமைப்பாகிப் போராடி வருகின்றன.

ஒரு சில சுயநலவாதிகள் தங்களின் அமைப்பைப் போராட்டப் பாதையில் இருந்து பிரித்து போராடாத போராட்டத்தைப் போராடுவதாகப் போக்குக் காட்டி வருகின்றன.

*போராடுவோரைத் துரிதப்படுத்தவும்,*

*போக்குக்காட்டுவோரை நெறிப்படுத்தவும்,*

*ஒன்றிணைந்து உரமூட்டும் கரங்கள்*

*உடனடித் தேவையாக இருக்கிறது.*

ஆனால்,

உரமூட்ட வேண்டிய கரங்கள் சோர்ந்து போன நிலையிலும் சோரம் போன நிலையிலுமே இருக்கின்றன.

காரணம். . .,

ஓய்வூதியப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வின்மையே!

எனவே,

*ஓய்வூதியம் பறிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து நம்மை நாம் வலுவூட்டி,*

*ஆக்கப்பூர்வமான அடுத்த கட்ட நகர்விற்கு நேராக முன்னேற,*

*27.12.2017 அன்று*

*திண்டுக்கல்லில் திரள்வோம்!*