வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்தவர்களுக்கு தகுதி அடிப்படையில் பணி

வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபி அருகே நம்பியூர் புதிய வருவாய் வட்டத்தைத் தொடக்கிவைத்து
செய்தியாளர்களிடம், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் முறையால் பணியில் சேர முடியாத நிலையில் உள்ளவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் டிசம்பரில் அறிக்கை பெற்று தகுதி உள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிவாய்ப்பு வழங்கப்படும். அதே நேரத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது என்றார்.