பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு

காலை மாணவர் வருகைப் பதிவேடு முடித்ததும் மாணவர்களுக்கு பாடம்
நடத்த ஆயத்தமானர்..ஆசிரியர்

நாலடியார் எனக் கூறியதும்த . அழைப்பு..

சாதிச்சன்றிதழ் தேவைப்படுவோர்...........................

விவரம் உடன் தரவும். என்றார்

வகுப்பிற்கு சென்று விவரம் கேட்டு குறித்துகொண்டிருக்கும்போது,

அடுத்ததகவல்

டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தவேண்டும் மாணவர்களை வரிசையாக அழைத்து வாருங்கள்..

வீதி முழுவதும் கோஷமிட்டு திரும்பி வந்தவுடன்..

தண்ணீர் குடித்து விட்டு மாணவர்களிடம்...

நாலடியார்.. என்று ஆரம்பித்தார்.

. இருந்து மீண்டும் அழைப்பு

 உடனடியாக நாளை அறிவியல் கண்காட்சி நடத்திட வேண்டும்..

இப்போது தான் Sms வந்தது உடன் ஏற்பாடு செய்யுங்கள் என்றார்..

உடனடியாக வகுப்பிற்கு சென்ற ஆசிரியர் மாணவர்களுக்கு அது பற்றி விளக்கி நாளை அனைவரும் ஆளுக்கொரு பொருள் செய்து கொண்டுவரவேண்டும்..

நாம் எப்படியாவது பரிசு வாங்கிட வேண்டும் என்று கூறினார்..


அடுத்த நாள் கண்காட்சி இனிதே முடிந்தது.

அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு சென்று மாணவர் வருகை பதிவேட்டை முடித்து நாலாடியார் என ஆரம்பித்தார் "

 அழைப்பு . இருந்து .

.. போனை காண்பித்து கலைத் திருவிழா விற்கு தயார்படுத்தவேண்டும் என்றார்..

அந்த நாள் இனிதே முடிந்தது..

அடுத்தநாள் கலைத் திருவிழா..

அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் வழக்கமாக பதிவேடு எடுத்து முடித்து விட்டு நாலடியார் என ஆரம்பித்து அடுத்த வரி செல்வதற்குள் .  அழைப்பு,,

 உடனே பேட்டரி டெஸ்ட் எடுத்து 3 நகலில் அனுப்பவேண்டும் என்று..

நான்கு நாள்கள் போராடியும் நாலடியார் என்ற வார்த்தையை தவிர நாலடி நடத்த இயலா நிலை..


எப்போது இந்த நிலை மாறுமோ?