#வஞ்சிக்கப்பட்ட_இடைநிலை_ஆசிரியர்கள்...

தொடக்க காலத்தில் இடைநிலை ஆசிரியர் 1 முதல் 8 வகுப்புகளுக்கு பாடம்
எடுத்து வந்ததை
நாமனைவரும் அறிந்ததே. ..

இவர்கள் 12-ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்கள். அக்காலத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தான் எண்ணிக்கையில் மிகப்பெரிது. 9,10 வகுப்புகளுக்கு
பட்டதாரிஆசிரியர்கள், 11,12 வகுப்புகளுக்கு
முதுநிலைபட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் எண்ணிக்கை நம்மைவிட மிகவும் குறைவு .

இடைநிலை ஆசிரியர் ஊதியத்திற்கும் பட்டதாரி ஆசிரியருக்கும் உள்ள ஊதிய இடைவெளி சில நூறு ரூபாய்தான் அந்த அளவிற்கு இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். அதற்கு காரணம் அன்றைக்கு இருந்த சங்கத்தின் தலைமைகள்.. *தன்னலமற்ற தனது உறுப்பினர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டே சங்கத்தின் தலைமைகள் இருந்தனர்.*

இத்தருணத்தில் தான் இநிஆ ஒற்றுமை மற்றும் சங்கத்தின் வீரியம் மற்றும் பொறுப்பாளர்கள் விவேகத்தால் பல சலுகைகளுக்காக போராட்டம் செய்து வெற்றி பெற்றதை ஒடுக்க நினைத்த அரசு மற்றும் அரசு உயர் அதிகார வர்க்கம்
இடைநிலை ஆசிரியர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புக்கு பாடம் எடுக்கும் திறன் இல்லாது உள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். இடைநிலை ஆசிரியர் உடனே வேலைக்கு வருகிறார்கள் ஆனால் பி.எட்., படித்தவர் வேலை இன்றி தவிக்கிறார்கள் என்று கூறி இடைநிலை 6,7,8 வகுப்பு
பாடங்களை திறம்பட கையாள முடியாமல் திணறுவதாக சொல்லி 6,7,8,9,10 வகுப்புகளுக்கு பி.எட்., படித்த பட்டதாரி ஆசிரியர்களாக பணியமர்த்தினார்கள். உண்மையிலேயே கல்வி நலனில் அக்கறை இருந்தால் ஏற்கனவே 9,10 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பி.., பி.எட்., ஆசிரியர்களையும் மாற்றி எம்.., பி.எட்., ஆக மாற்றி இருக்க வேண்டும். 11,12 ஆம் வகுப்புக்கு எம்.., எம்.எட்., எம்.ஃபில்., படித்த ஆசிரியர்களை நியமித்திருக்க வேண்டும் அதுவல்லவா நல்லது. அதை விடுத்து *ஜாம்பவானாய் திகழ்ந்த இடைநிலை ஆசிரியர் கூடாரம் துடைத்தெறியப்பட்டது.* அடுத்து இடைநிலை ஆசிரியரை 1 முதல் 5 வகுப்புகளுக்கு மட்டுமே பாடம் எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்தார்கள். ... அன்றே நமது உரிமையை விட்டுக்கொடுத்து விட்டோம். ..
😰😰😰😰

*அடுத்து ஊதிய இழப்புகள் அரங்கேறியது*.
5வது ஊதியக்குழுவில் இநிஆ அடிப்படை ஊதியம் ₹ 4500. .ஆசிரியர்களுக்கு ₹5500 மற்றும் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹6500. அடிப்படை ஊதியத்திலேயே ₹ 1000 மட்டுமே வித்தியாசம்.

அதுவே 6வது ஊதியக்குழுவில்
பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தை பல மடங்காக உயர்த்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதம் குறைக்கப்பட்டு 10 ம் வகுப்பு தகுதியான அலுவலக உதவியாளர் கிரேடு ஊதியத்தில் வைத்து வஞ்சிக்கப்பட்டோம்.
இநிஆ ஊதியம் ₹5200 +2800 எனவும் .ஆசிரியர்களுக்கு ₹9300+4600 என்று நிர்ணயிக்கப்பட்டது.

அன்றைய நாளில் பணிபுரிந்த இநிஆ ஆசிரியர்களுக்கு ஊதிய குறைப்பு ஏற்பட்டது. எனவே அன்று பணிபுரிந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் 1.86 ஆல் பெருக்கி வழங்கப்பட்டது. *அன்றைய சங்கவாதிகள் அதனை கண்டிக்கவில்லை. .*

*அன்றே இநிஆ பணிக்கான ஊதியம் (5200+2800) X 1.86 என மாற்றிருந்தால் இன்று நாம் போராட்டம் செய்ய தேவையில்லை* மாறாக இப்பிரச்சனையை காட்டி இநிஆ போராட்டத்திற்கு அழைத்து கூட்டம் காட்டி அவர்களுக்கு தேவைப்பட்ட காரியங்களை சாதித்துக் கொண்டார்கள். அடுத்து வரும் ஆசிரியர்களைப் பற்றிய துளியும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

அதிலும் புதிதாக 2009 மற்றும் அதற்கு பின்னர் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு. .
அந்த இழப்பிற்காக 750pp வழங்கப்பட்டது. கொடுமை அது அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் என்ன வேடிக்கை என்றால் பாதிக்கப்பட்ட நமக்கு வழங்கிய 750தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பலரும் இன்று வரை பெற்று வருகின்றனர். பதவி உயர்வு பெற்றபிறகு ஊதியக் கட்டு மாறிய பிறகு எதுக்கப்பா பங்கு போடுறீங்க.
இப்போது 2017 ல் நடைமுறைப் படுத்தியுள்ள 7வது ஊதியக்குழுவிலாவது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்து விடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும் மண் விழுந்து விட்டது...

2009க்கு பின் வந்த ஆசிரியர்கள் தகுதித்தேர்வு 7வது ஊதியக்குழுவில் 2.57 மட்டுமே பெருக்கி ஊதிய மாற்றம் என்ற
இறுதிக்கட்ட வஞ்சிப்பிற்கு ஆழாக்கப்பட்டுள்ளோம்.எந்தவொரு போராட்டக்களத்திலும் முன் நிற்பது இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே... போராட்ட களத்தில் பள்ளிக்கு செல்பவர்கள் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள். நமது பணியிடங்களை தாரை வார்த்து போராடி அவர்களுக்கு மிகப்பெரிய பலனை வாங்கி கொடுத்துள்ளோம் என்பதையே மறந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள்.

*நமது ஊதிய முரண்பாடு நமக்கு*
2009க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும் நமக்கும் மிகப்பெரிய வேறுபாட்டை ஏற்படுத்திவிட்டார்கள்.. அவர்கள் 1.86ஆல் பெருக்கி ஊதியத்தை பெற்றவர்கள். நாம்5200-2800 ஊதியகட்டில் மாட்டிக்கொண்டோம்.. அதனால்தான் இவ்வளவு சிக்கல். நமது ஊதிய முரண்பாடு களைய வேண்டுமெனில் *சமவேலைக்கு சமஊதியம்* என்னும் கோட்பாட்டில் 2009க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.86ஆல் பெருக்கி ஊதியம் கட்டமைக்கும் போது நாம் விடிவு பெறுவோம். இதில்750pp களைந்தாலும் பரவாயில்லை. எதுவானாலும் 2009க்கு பிறகுநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் என்பதற்காக 1.86 பெருக்கி கொடுப்பது தான் தீர்வு. ..
*இடைநிலை ஆசிரியர் ஒற்றுமை ஓங்குக... ஒன்றிணைந்து வென்றெடுப்போம் நமது இழப்புகளை!!!!*
 👉👉
*கி.கண்ணன்*

_மாநில பொருளாளர் *SSTA*_