ஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும்

பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குதல், ஸ்மார்ட் வகுப்பறைகளைத் தொடங்குதல், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கணினி மயமாக்குதல் போன்ற திட்டங்களை
செயல்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.

பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ரெ.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம், பொது நூலகத் துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன், சென்னை மாவட்ட மைய நூலகர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீட் பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய காலம் நீட்டிப்பு தமிழகத்தில் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்காக 442 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

பயிற்சி மையங்களில் சேர மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக கடந்த அக்.16-ஆம் தேதி முதல் வரும் 26-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பல பள்ளிகளுக்கு பயனாளர் குறியீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமைச்சர், ' அதிக மாணவர்கள் பயன்பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.


மாணவர்களின் நலன் கருதி பயிற்சி மையத்தில் சேருவதற்கான பதிவு நவம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்கப்படும். போட்டித் தேர்வு தொடர்பாக 54 பேராசிரியர்கள் ஆந்திர மாநிலம் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள 3,000 ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்குவர். மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் டிசம்பர் மாதம் தொடங்கும்.