முன்பணம் தாமதத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி

தீபாவளி முன்பணம் தாமதமாகி உள்ளதால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தீபாவளி பண்டிகைக்காக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களது மாதச் சம்பளத்தில், 5,000 ரூபாய்
முன்பணமாக வழங்கப்படும். இந்த ஆண்டு, முன்பணம் வழங்க, அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். வரும், 13க்குள் முன்பணம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து உள்ளனர்

சில ஒன்றியங்களில் குறைவான Allotment மட்டுமே ஆகியுள்ளது .அதனால் சில ஆசிரியர்களுக்கு மட்டுமே விழா முன்பணம் கிடைத்துள்ளது.பல ஆசிரியர்களுக்கு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .