ஜாக்டோ-ஜியோ 3 அம்ச கோரிக்கைகளில் cps இரத்து செய்தல் என்பதே முதன்மையான கோரிக்கையாக இருக்க வேண்டும்-தமிழக ஆசிரியர் மன்ற -பொதுச்செயலாளர்-வே. இளங்கோ- அவர்கள் உரைஜாக்டோ-ஜியோ-மாநில ஆலோசனை கூட்டம்.
நாள் : 25- 07 - 2017
இடம்: தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் கழக அலுவலகம். சென்னை

தமிழக ஆசிரியர் மன்ற -பொதுச்செயலாளர்-வே. இளங்கோ- அவர்கள் உரை.
3 அம்ச கோரிக்கைகளில் cps இரத்து செய்தல் என்பதே முதன்மையான
கோரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன்பாகவே அடையாள பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.

மாநிலம் முழுதும் ஒரே மாதிரியான  கோரிக்கை  வார்த்தை வரிகள் அமையும் பொருட்டு அவற்றை உள்ளக்கிய துண்டு பிரசூரங்களை மாநில ஜாக்டோ-ஜியோ
வடிவமைத்து வழங்க வேண்டும்.

பேரணியின் போது ஜாக்டோ -ஜியோ பதாகைகள் தவிர ,வேறு எந்த ஒரு இயக்க பதாகைகளும் பயன்படுத்தக் கூடாது.

ஜாக்டோ-ஜியோ வில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் சார்ந்த மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்  தங்களை எவரும் அழைக்கவில்லை என்றோ அல்லது வேறு பல காரணங்களையோ கூறாமல் , பேரணி அதன் பின்னர் வரும் தொடர்ச்சியான போராட்ட நடவடிக்கைகளில் முழு உற்சாகத்துடன் ஈடுபட வேண்டும்.

 மாநில ஜாக்டோ-ஜியோகூறும் ,வழிகாட்டும் நெறிமுறைகளை அனைத்து இயக்கங்களின்  மாவட்ட மற்றும் கிளை அமைப்புகள் ஒற்றுமையுடன் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். 

என்றும், மேலும் கூட்டத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளுக்கும்
தமிழக ஆசிரியர் மன்றம்  தனது முழு ஒத்துழைப்பினை நல்கும் என்று எழுச்சி உரையாற்றினார்.
தகவல்:-திரு. வே.இளங்கோ-பொதுச்செயலாளர்

தமிழக ஆசிரியர்- மன்றம்.