அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி


அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்? அரசு ஆசிரியர்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டாயப்படுத்தாதது ஏன்? பெற்றோர் தனியார் பள்ளிகளை நாட காரணம்
என்ன
Image may contain: screen


 ஆங்கிலவழி கல்வி தொடங்க அனுமதி மறுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.


2012க்கு பின் எத்தனை ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன? ஆங்கிலவழி வகுப்பை நடத்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஆசிரியர்கள் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது? குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடைசெய்ய கூடாது? அனைத்து கேள்விகளுக்கும் ஜூலை 14க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.