சிறு, குறு வணிகர்களுக்கு வங்கிக் கடன் அளவு அதிகரிப்பு: மோடி பேச்சு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: தொழில்
தொடங்குவோருக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சிறுவணிகர்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும்.

சிறு மற்றும் குறு வணிகர்களுக்கான கடன் அளவு இப்போதுள்ள, ரூ.1 கோடியிலிருந்து, ரூ.2 கோடி வரை உயர்த்தப்படும். சிறு குறு தொழில்களுக்கு வரிவிதிப்பில் சலுகைகள் செய்யப்படும்.

சிறு, குறு தொழில்களுக்கான கடன் தொகை அளவை 20 சதவீதத்திலிருந்து, 25 சதவீதமாக உயர்த்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு மோடி தெரிவித்தார்.