தமிழகத்தில் கணிணி கல்வி தேவை- பொதுமக்கள் கருத்து

கேள்விக்குறியாகும் கணிணி கல்வி...

தமிழகத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என பல நிலைகளில் அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் அனைத்து
பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முறையே நியமிக்கப்பட்டு வருகின்றனர்

ஆனால் அனைத்துவகை பள்ளிகளுக்கும் கணிணி வழங்கப்பட்டுள்ள நிலையில் கணிணி கற்பிக்க முறையான ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்ற சூழல் உள்ளது...

இதனால் கணிணி பாடத்தில் மாணவர்கள் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது...

நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆன்ட்ராய்ட் பயன்பாடு என நம் அன்றாட சாதாரண பயன்பாட்டிற்கே கணிணி அடிப்படை அறிவு தேவைப்படும் நிலையில் பள்ளி அளவிலே கணிணி பற்றிய போதிய கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மிகவும் அவசியமாகிறது...

ஆனால் பள்ளிகளில் போதிய கணிணி ஆசிரியர்கள் நியமிக்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப் படுகிறது...

இன்று  demonetization மக்களை மிகவும் பாதிக்கிறது என்றால் அதற்கு மக்களிடையே காணப்படும் கணிணி அறிவின்மையே காரணம்

எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாக பள்ளிகளில் கணிணி கல்வி ஏற்படுத்திட வேண்டும், வரப்போகும் முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகளில் கணிணி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக எழுந்துள்ளது.