விரைவில் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணம் வங்கிகளில் வைக்கப்படும்: பிரதமர் மோடி உரைபுத்தாண்டையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை (31.12.2016) இரவு தொலைக்காட்சி மூலமாக உரையாற்றினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.

தீபாவளிக்கு பிறகு கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கருப்பு பணமும், ஊழலும்
நேர்மையானவர்களையும் வீழ்த்தி விடுகிறது. ஊழலை ஒழிக்க ஒலு நல்ல வாய்ப்புக்காக இந்திய மக்கள் காத்திருந்தனர். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அரசின் நடவடிக்கையால் நேர்மையான மக்களும் கடும் சோதனைக்கு ஆளாகினர். மக்கள் தாங்கள் பட்ட துன்பங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். மக்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டனர் என்பதை நான் அறிவேன்.


கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் தந்த ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறேன். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது. கடந்த 50 நாட்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்தியா சந்தித்துள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். கருப்பு பணம், ஊழலுக்கு எதிராக மக்களும், அரசும் இணைந்து போராட வேண்டும். விரைவில் மக்களுக்கு வழங்குவதற்கு தேவையான பணம் வங்கிகளில் வைக்கப்படும் என்றார்.