அனுமதி கடிதம் எழுத தெரியாத அரசு ஊழியர்கள் : ஆய்வில் 'திடுக்'

'அரசு ஊழியர்களில் பலருக்கு அனுமதி மற்றும் விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை' என, தமிழ் வளர்ச்சித் துறை
ஆய்வில் தெரியவந்துள்ளது.அனைத்து துறைகளிலும், தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள், அனைத்து அலுவலகங்களிலும், ஆய்வுகளை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதில், பலருக்கு அனுமதி, விடுப்பு கடிதம் கூட, முறையாக தமிழில் எழுத தெரியவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, அவர்களுக்கு பலமுறை அறிவுரை வழங்கினாலும், தவறுகளை திருத்தி கொள்வதில்லை என, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆதங்கப்படுகின்றனர்.