நகர்ப்புற ஏழைகள் வீட்டுக்கடனுக்கு வட்டி தள்ளுபடி.. 2 வீட்டு வசதி திட்டங்களை அறிவித்த மோடி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி டிவி வாயிலாக இன்று இரவு
நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:
ஏழைகளுக்கு வீடு அளிக்க பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், புதிதாக 2 திட்டங்கள் வகுத்துள்ளோம். நகர்ப்புற ஏழைகள், நடுத்தர மக்கள் சொந்த வீடு கட்ட ரூ.9 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு மொத்த வட்டி விகிதத்தில், 4% விலக்கு அளிக்கப்படும்.


ரூ.12 லட்சம் வரை கடன்பெறுவோருக்கு 3% வட்டி விலக்கு அளிக்கப்படும். அதேபோல 2 லட்சம் வரையில் கடன் பெறுவோருக்கும் 3 சதவீத வட்டி குறைப்பு சலுகை கிடைக்கும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அளவு அதிகரிக்கப்படும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.