2017 குழந்தைகள் நேயமுள்ள ஆண்டாக அமையட்டும். புதிய கல்விச் சிந்தனைகள் வளரட்டும்.

தற்பொழுது தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணைப்புப் பெற்று 540 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இக்கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் முதலாண்டில் படிக்கும் மாணவர்களில் 51.51 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த 2015 -16 ஆம் ஆண்டில் முதல் பருவத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 52.2 விழுக்காட்டினர் மட்டுமே இரண்டாம் பருவத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இன்று பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் பெரும்பாலோர் தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் என்று நம்பப்படுகின்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். +2 வகுப்புவரை படிப்பை முடித்துள்ள மாணவர்களின் கல்வித் தரமே இப்படிப்பட்ட கீழான நிலையில் தான் உள்ளது. 9 ஆம் வகுப்பிற்கு மேல் கட்டாயத் தேர்ச்சி முறை இல்லாமல் நான்காண்டுகள் படித்துவிட்டு வந்துள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நாம் என்ன வழிகளைக் கையாளப் போகிறோம்? 8 ஆம் வகுப்பு வரை உள்ள கட்டாயத் தேர்ச்சி முறையை 5 ஆம் வகுப்பு வரை மாற்றிவிட்டால் கல்வித் தரம் உயர்ந்து விடுமா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடைகானும் நோக்கில் தொடர்ந்து பயணிப்போம்.

குழந்தை நேயக் கல்விச் செயல்பாட்டில் இணைந்து பயணிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்பினர், கல்வித் துறையினர், சமூகச் செயல்பாட்டாளர்கள், எழூத்தாளர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்..