பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு 1-ந் தேதி முதல் தளர்த்தப்படுகிறது

வங்கிகளில் செல்லாத பழைய ரூபாய்களை டெபாசிட் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தாலும், ரிசர்வ் வங்கியில் மார்ச் 31-ந் தேதிவரை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது? என்பதற்கான ஆதாரத்தை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பிக்க
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வங்கிகள் மற்றும் .டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து தளர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் கங்வார் நேற்று தெரிவித்தார்.