தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது.


தமிழகத்தில் புதியதாக 1591 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது. 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரப்படி, அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப, கூடுதலாக முதுகலையாசிரியர்களை நியமிக்க,
பள்ளிக்கல்வித்துறைக்கு, அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் 470, ஆங்கிலம் 154, கணிதம் 71,இயற்பியல் 118, வேதியியல் 115, உயிரியல் 40, தாவரவியல் 92,விலங்கியல் 76, வரலாறு 73,புவியியல் 17, பொருளியல் 166, வணிகவியல் 199 என,பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

 


சென்னை 10, காஞ்சிபுரம் 84,திருவள்ளூர் 125, விழுப்புரம் 67,கடலூர் 24, வேலூர் 124, திருவண்ணாமலை 165,தர்மபுரி 79,கிருஷ்ணகிரி 89,சேலம் 73,நாமக்கல் 30,ஈரோடு 61,கோவை 32, திருப்பூர் 45,நீலகிரி 14,திருச்சி 54,பெரம்பலூர் 19,அரியலூர் 31, கரூர் 36,புதுக்கோட்டை 47,தஞ்சாவூர் 34,நாகப்பட்டினம் 29,திருவாரூர் 29,மதுரை 49,திண்டுக்கல் 48,தேனி 25,சிவகங்கை 22,ராமநாதபுரம் 30,விருதுநகர் 38, தூத்துக்குடி 24,திருநெல்வேலி 45,கன்னியாகுமரி 6 என, மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட செயலாளர் கணேசன்,"" மாணவர்கள் தரத்தை உயர்த்துவதற்கு,பணி நியமனம் மிகவும் உதவும், '' என்றார்.