நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு இல்லை... 'லீப் செகண்ட்' அதிசயம்!

 இந்த 2016 பலருக்கும் ஒரு நீண்டஆண்டாக இருந்திருக்கும், கவலை வேண்டாம்! அது இன்னும் நீளப்போகிறது.இம்முறை புத்தாண்டுக்கு10,9,8... கவுண்ட்டவுனுக்கு பதில் 11,10,9... என இருக்கவேண்டும். ஏனென்றால் எப்போதும் 12 மணிக்கு கொண்டாடப்படும் புத்தாண்டு இவ்வாண்டு 12
மணி 1 வினாடிக்கு கொண்டாடப்படுமாம். ஏன் என்று தெரியுமா?
லீப்
இந்த டிசம்பர் 31-ம் தேதி அனைத்து நேரகாப்பாளர்களும் 'லீப் செகண்ட்' என அழைக்கப்படும் ஒரு வினாடியை தங்களது கடிகாரங்களில் கூட்டுவர்.லீப் இயர் நாம் அறிந்ததே, பூமி சூரியனை சுற்றிவர சரியாக 365.25 நாட்கள் ஆகும். மீதம் இருக்கும் 0.25 நாள் 4 வருடங்களில் 1 நாள் ஆவதே லீப் இயர், அந்த நாள் தான் பிப்ரவரியில் சேர்க்கப்படும் 29-ம் தேதி. அதே போல் நேரத்தை பூமியின் சுழற்சியுடன் சரிவர இருக்க சேர்க்கப்படுவதே லீப் செகண்ட்.அதாவது பூமி ஒரு சுழற்சிக்கு சரியாக 24 மணிநேரம் எடுப்பதில்லை, அது 86400.002 வினாடிகள் எடுக்கும். அந்த 0.002 விநாடிகள் தான் சேர்ந்து இப்போது 'லீப் செகண்ட்'டாக சேர்க்கப்படவுள்ளது.

இப்போது உலகளாவிய நேரநிலையான கோஆர்டிநேட் யூனிவேர்சல் டைம்மில்(UTC) இந்த டிசம்பர் 31-ம் தேதி 23:59:59லிருந்து 23:59:60க்கு சென்றபிறகு தான் 00:00:00க்கு செல்லுமாம் UTC யின் கடிகாரம்.இந்த லீப் செகண்ட் சேர்க்கும்முறை 1972ல் செயல்படுத்தப்பட்டது அதில் 27 ஆண்டுகளில் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

லீப் நொடியால் பாதிப்பா?

 1972-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி, கடைசியாக கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தனமிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிப்போயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிப்போனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின.

 2015-ம் ஆண்டு  ஜூன் 30-ம் தேதி இந்த லீப் செகண்ட் வந்தபோது பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது கூகுள்இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுளின் அனைத்து சர்வர்களும் இணையத் துவங்கும். இந்த செயல்பாடு முடியும்போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியது.

இப்படி ஒரு வினாடியைத் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது உலக அளவில் பிரச்னையாகியிருக்கிறது. சேர்த்துக் கொள்வதால் பிரச்னை ஏற்படுகிறது. ஆகவே "கூடாது, இதை நிறுத்த வேண்டும்" என்று அமெரிக்கா தலைமையிலான நாடுகள் எதிர்க்கின்றன. ஒரு வினாடியை சேர்த்துக் கொள்வதை நீடிக்க வேண்டும் என்று பிரிட்டன் தலைமையிலான நாடுகள் வற்புறுத்துகின்றன. லீப் வினாடியைச் சேர்க்கும் ஏற்பாடு இல்லாமல் போனால் கால வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே போகும். 500 ஆண்டுகளில் இது ஒரு மணி நேரமாக அதிகரித்து விடும்.


தானாக அப்டேட் ஆகிக்கொள்ளும் மொபைல்களும், கம்ப்யூட்டர்களும் நேரத்தை மாற்றிகொள்ளும்.மத்த கடிகரங்களில் நீங்களே மாற்றலாம், ஆனால் நமது தேவைக்காக 5,10 நிமிடங்கள் கூடவும்,குறையவும் வைக்கும் நமக்கு ஒரு வினாடி பெரியவிஷயம் இல்லையே!