• 9:20 PM
  • www.tntam.in
 வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும்,
காற்றழுத்த தாழ்வுநிலைகள் வலுவடையாததால் மழை பெய்வது இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சமாக வடகிழக்கு பருவமழை கவனிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 30–ந்தேதி தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதுமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டதுஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை அதிகம் வலுப்பெறாத காரணத்தால் மழைப்பொழிவு எதிர்பார்த்தபடி அமையவில்லை.

இதற்கிடையில்நாடாமற்றும்வார்தாபுயல் காரணமாக தமிழக கடல் பகுதியிலுள்ள ஈரப்பதமும், காற்றின் அழுத்தமும் காணாமல் போனது. குறிப்பாகவார்தாபுயல் தமிழகத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து வங்கக்கடலில் எழுந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெறவே இல்லை.

இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்து விட்டதாக கருதப்படுகிறது. வழக்கமான அளவுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 38 சதவீத மழையே பதிவாகி உள்ளது. பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்றுடன் வடகிழக்கு பருவமழை முடிந்துவிடும் என்று கருதப்பட்டது.


ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவடையவில்லை என்றும், இன்னும் 10 நாட்கள் வடகிழக்கு பருவமழை காலம் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive