*ஓய்வூதியத்தை வழக்காடிப் பெற்றிட இயலுமா?*


📮நாடு முழுவதும் நிலுவையில் உள்ள குடிமையியல் & குற்றவியல் வழக்குகள் *2.7 கோடி*
📮10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் *20 லட்சம்*
📮5 - 10 ஆண்டுகள் நிலுவை - *35 லட்சம்*

📮2 - 5 ஆண்டுகள் நிலுவை - *59 லட்சம்*
📮2 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ளவை *82 லட்சம்*
*📮மூத்த குடிமக்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,84,273*
_.பி மற்றும் டெல்லி மாநில விவரங்கள் தேசிய தகவல் தொகுப்புக்கு மாற்றப்பட்டு வந்ததால் அந்த விவரங்கள் இதில் இடம்பெறவில்லை. இது சென்ற ஆண்டு நிலை மட்டுமே_ (தி இந்து)
*📮ஏப்ரல் (2016) = 2.18 கோடி.* (இந்தியன் எக்ஸ்பிரஸ்)
மேற்கண்ட தரவுகளின் படி மட்டுமல்ல, நீங்கள் நாள்தோறும் கேள்விப்படும் அரசு சார் வழக்குகளிலும், தீர்ப்பு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றோ; நீதிமன்றத் தீர்ப்பை அரசே புறம் தள்ளுவதாகவோ தான் இருக்கும் (சாலைப்பணியாளர், மக்கள் நலப் பணியாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் வழக்கு போன்று). இவை எல்லாவற்றையும் தாண்டி அத்தி பூத்தாற்போல் சில தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தப்டுகிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
ஆனால், இன்றைய சூழலில் *நாம் துய்த்து வரும் பலன்கள், 100% நமது முன்னவர்களின் வலுவான போராட்டங்களின் பயனே!* நமக்கான முறையான உரிமை தொடர்பான முன்மொழிவுகள், மீட்புகள் உள்ளிட்ட அனைத்துமே போராட்ட வீச்சின் அடிப்படையில் ஆட்சியாளர்களிடம் இருந்து பெறப்பட்டவையே.
எனவே, *கோடிக்கைகள் ஒன்றிணைந்தால் தான் கோரிக்கைகள் வென்றிடமுடியும்.*
ஆனால், ஓய்வூதியப் போராட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் பங்கெடுப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலை மாற,
*உரிமை பறிபோன வழியையும்*
*உடைமை பலியான வலியையும்*
*உற்றவர் உணர்ந்தாக வேண்டும்.*
எப்படியெனில்,
_வாசித்தல், அறிய வைக்கும்!_
_அறிதல், தெளிய வைக்கும்!_
_தெளிதல், உணர வைக்கும்!_
_ உணரல், வினவ வைக்கும்!_
_வினவல், கூட வைக்கும்!_
_கூடல், கோர வைக்கும்!_
_கூடிக்கோரல், அதிர வைக்கும்!_
_அதிர்வுறலே, கொடுக்க வைக்கும்!_
_எனவே, *பறித்திட்ட ஓய்வூதியத்தை*க்_
_கொடுக்க வைக்கும் நோக்கில்,_
_*கானலான ஓய்வூதியம்* நூலினை_
_வாசிப்போம்! *வாசிக்க வைப்போம்!!*_

*66 பக்கங்களுக்கான அச்சுக்கூலி ரூ.25/-*