ரேஷன் அரிசியில் புழுவா? : '1967'ல் புகார் அளிக்கலாம்

ரேஷன் பொருட்கள் தரம் தொடர்பாக, '1967' என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கும் வசதியை, தமிழகம் முழுவதும் உணவு துறை விரிவுபடுத்தியுள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்திலும், அவற்றின்
தரத்திலும், பல புகார்கள் எழுகின்றன.
இதையடுத்து, பொது வினியோக திட்ட புகார்களை பெற, தனி சேவை மையம் துவக்க, உணவு துறை முடிவு செய்தது. அதன்படி, '1967' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில், புகார் அளிக்கும் வசதி துவங்கப்பட்டது; மே மாதம், முதல் கட்டமாக, அரியலுார் உட்பட, 11 மாவட்டங்களில் செயலுக்கு வந்தது. தற்போது, அந்த திட்டம், தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. ரேஷன் கடை செயல்பாடு, பொருட்கள் தரம் உள்ளிட்டவை தொடர்பாக, 1967 என்ற எண்ணில், காலை, 8:00 முதல், மாலை, 6:00 வரை புகார் அளிக்கலாம். அங்கு பெறப்படும் புகார்,

பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்படும்; புகார் மீது எடுத்த நடவடிக்கையும் தெரிவிக்கப்படும்