மாற்று திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு 'ஸ்காலர்ஷிப்'மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டுக்கு, 2,500 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகமான,
என்.எச்.எப்.டி.சி.,யின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக, உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில், பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், மத்திய அரசால் வழங்கப்படும். தொழிற்கல்வி பட்டப்படிப்புமாணவர்களுக்கு, 10 மாதம், தலா, 2,500 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு மாதம், 3,000 ரூபாய்வழங்கப்படும். புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் வாங்க, பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 6,000 ரூபாய்; முதுநிலை மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.


நடப்பு கல்வி ஆண்டுக்கு, இந்த உதவித் தொகையை பெற, மத்திய அரசின் என்.எச்.எப்.டி.சி., இணையதளத்தில்,'ஆன்லைனில்' பதிவு செய்து, அதன் நகலை, புதுடில்லியில் உள்ள நிறுவன அலுவலகத்துக்கு, தபாலில் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விபரங்களை, http://www.nhfdc.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.