காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தி.மு.க. கொறடா சக்கரபாணி சுட்டிக்காட்டி, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின், “ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 79,356 ஆசிரியர்கள் நிரப்ப அனுமதி பெறப்பட்டு, 74,316 ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, ஆசிரியர்-மாணவர்கள் விகிதாச்சாரம் 1:25 என்ற அளவில்
உள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கையால், ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி தேசிய அளவில் சாதனை படைக்கப்பட்டுள்ளதுஎன்றார்.