கமிஷன்' பிரச்னையால் முடங்கியதா கம்ப்யூட்டர் கல்வித் திட்டம்?

 கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) சுருக்கமாக .சி.டி.

பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார்
பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.

அதன்படி மத்திய அரசின் (ஆர்.எம்.எஸ்.., எனப்படும்) அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த திட்டத்துக்கான நிதியைப் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. கடந்த 2011-12 ம் கல்வியாண்டில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை 4345 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த, மத்திய அரசு முதல் கட்டமாக 43 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.2011-ம் ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தினால், ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ரூ.250 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு தயாராக இருந்தது. ஆனால், பெயருக்கு முதல்வர் கடந்த முறை வெற்றி பெற்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மட்டும் இதை செயல்படுத்தி விட்டு, பாதியில்அம்போஎன்று விட்டு விட்டார்கள். முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்த ரூ. 43 கோடியையே சரியாக செலவழிக்கவில்லை.


"43 கோடி ரூபாய் என்ன ஆச்சு. அந்த திட்டத்தை ஏன் கிடப்பில் போட்டீர்கள்" என்று கேள்விகள் கேட்டு, தமிழக பள்ளிக்கல்வித்துறையை விழி பிதுங்க செய்து விட்டது, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பிளான் அப்ரூவல் போர்டு.  2011-12ம் ஆண்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு பள்ளிக்கும் கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்கள் சப்ளை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். ஆனால், கமிஷன் பிரச்னையால் டெண்டர் விவகாரம் ‘‘ஜவ்வு மிட்டாய்’’ போல் இழுத்துக் கொண்டு போனது. ஒரு வழியாக,  '.சி.டி., திட்டத்துக்கான டெண்டர், 11.9.2013-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கும்' என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணமோ அப்போதும் டெண்டர் நடக்கவில்லை. இதன் பின்னணியில், பள்ளிக்கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் தலையீடு இருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.

.சி.டி., திட்டம் பற்றி தமிழக அரசிடம் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டதற்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அனுப்பிய பதில்தான் ரொம்பவும் வேடிக்கையானது.

'2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானதால், டெண்டர் விட முடியவில்லை' என்று பதில் சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால் உண்மை நிலவரமோ வேறு. அதாவது, இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு முதல் கட்டமாக நிதி வழங்கியதோ 2011-12ம் கல்வியாண்டில். டெண்டர் அறிவிப்பு வெளியானதோ 2013-ம் ஆண்டு. சட்டசபை தேர்தல் நடந்ததோ 2016-ம் ஆண்டு மே மாதம். எவ்வளவு குளறுபடிகள்.

இது பற்றி பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்தவர்களிடம் பேசினோம்.

"எந்த திட்டமும் உருப்படியாக நிறைவேறவில்லை. முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த பல திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. உயர் அதிகாரிகளின்கமிஷன்பிரச்னையால் அந்த திட்டங்கள் எல்லாம் அப்படியே அந்தரத்தில் தொங்கியபடி இருக்கின்றன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு, இது பற்றி எதுவும் தெரிவதில்லை'' என்று காதை கடிக்கின்றனர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் சபீதாவை தொடர்பு கொண்டு பேசினோம். ".சி.டி., டெண்டர் விவகாரத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றவில்லை. அதனால் டெண்டர் தள்ளிப்போகிறது. விரைவில் புதிதாக டெண்டர் விடப்பட்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படும்" என்றார்.

Source:www.vikatan.com

http://bit.ly/2a8y1Mn