பள்ளிகளில் சத்துணவு திட்டம் நிறுத்தம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு.

சத்துணவு திட்டம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக
கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) பேசினார்.

அப்போது சத்துணவு திட்டம் குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க பேரவைத் தலைவர் உத்தர விட்டார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் சட்டப்பேரவை வளா கத்தில் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

பட்ஜெட் விவாதத்தில் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, ‘பெரம் பலூர் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று காமராஜர் பிறந்த நாளான கடந்த 15-ம் தேதி அந்த மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். இது தொடர்பாக பேசப் போகிறேன் என்று சட்டப் பேரவைத் தலைவரிடம் காலை யிலேயே கூறியுள்ளேன்என்று கூறினார்.மாவட்ட ஆட்சியரின் உத்தர வைப் பற்றி பேரவைத் தலைவரின் உத்தரவை பெற்ற பிறகுதான் பேச வேண்டும் என்று விதி எதுவும் இல்லை.

10 பள்ளிகளில் சத்துவுணவு திட்டம் கூடாது என்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தெளிவாக உள்ளது. அதுபற்றி பேசினால், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் கூறுகிறார். சக்கரபாணி பேசியது அவைக்குறிப்பிலேயே இருக்கட்டும். இப்பிரச்சினை தொடர்பாக விசாரித்துவிட்டு துறை யின் அமைச்சர் நாளைக்குக்கூட விளக்கட்டும் என்று எவ்வளவோ பேசிப் பார்த்தோம். ஆனால், எங்களுக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்கவில்லை.இது ஜனநாயக படுகொலை. எனவே, இதைக் கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தோம். தமிழகம் கடனில் சிக்கித் தவிப்பதால் இத்தகைய உத்தரவை போட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது.மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோதுபார்வையை பறி கொடுத்தவர்களுக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளது போது மானதல்ல. இதை ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.


திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்துவிட்டு அப்படியே வெளியே செல்வதாக சொல்லப் படுகிறது. அது உண்மை இல்லை. எங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிப்படுத்துவதற்காக வெளிநடப்பு செய்து, பேரவைக்குள் சொல்ல முடியாத விஷயங்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் முன் சொல்கிறோம். திமுக உறுப் பினர்கள் எதிர்க்கட்சித் தலை வருக்கும், துணைத் தலைவருக் கும் கட்டுப்படவில்லை என்றுபேரவைத் தலைவர் அரசியல் உள்நோக்கத்தோடு சொல்வ தாகவே கருதுகிறோம்.இவ்வாறு மு..ஸ்டாலின் கூறினார்