அனைத்து மானியங்களுக்கும் 'ஆதார்'

அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு
ஆதார்எண் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் ஆதாருடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

மத்திய அரசின் அனைத்து மானியம் மற்றும் நலத் திட்டங்களையும் நேரடி மானியத்தின் கீழ் அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் கொண்டு வரவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.மேலும் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள், மாநில அரசுகளில் நேரடி மானியத்துக்கென தனிப் பிரிவு துவங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.