தடயவியல் அதிகாரி பதவி : எழுத்து தேர்வு அறிவிப்பு

தமிழக தடயவியல் துறையில், இளநிலை அறிவியல் அதிகாரி பணியில், 30 காலியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.விருப்பமுள்ளவர்கள், முதுகலை படிப்பில், எம்.எஸ்சி., தடய அறிவியல், உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றில்,
ஒரு பாடப்பிரிவை படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியை ஓரளவு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு பணியாளர் தேர்வு ஆணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், பெயர் விபரங்களை முதலில் பதிவு செய்ய வேண்டும். பின், அதில் வழங்கப்படும் கடவு எண் மற்றும் ரகசிய குறியீடு எண் மூலம், ஆக., 28 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்களுக்கு, அக்., 16ம் தேதி காலை மற்றும் மாலையில், இரு தாள்களுக்கு எழுத்து தேர்வு நடக்கும்.

கூடுதல் விபரங்களை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.