பாட வாரியாக ஆசிரியர்கள் விபரம்

விருதுநகர்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகள் மற்றும் முகாம் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் விபரங்களை பாடம் வாரியாக இணைய தளத்தில் பதிவு செய்ய அனைத்து மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, பாடவாரியாக உள்ள ஆசிரியர்களின் விபரங்களை ஜன.,27 முதல் ஜன.,29 மாலை 5 மணிக்குள் www.tn.dge.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளித் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ஒரு மாவட்டத்தில் எந்த பாடத்தில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால், தேர்வு திருத்தும் பணிகளில் எதாவது ஒரு பாடத்தின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின், அந்த பாடத்தின் ஆசிரியர்கள் அதிகம் உள்ள மாவட்டத்திற்கு விடைத்தாளை அனுப்பி, விரைவில் திருத்தும் பணியை முடிக்க முடியும் என்ற திட்டத்துடன் இதன் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது,” என்றார்.