இரண்டாம் கட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற வாய்ப்பில்லை

இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 80 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 117 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பணியிடங்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து பதவியர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு.இரவிச்சந்திரன் கூறுகையில் தமிழகத்தில் தற்பொழுது 117 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதெனவும், தமிழாசிரியர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தடை ஆணை பெறப்பட்டுள்ளதால் தற்சமயம் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு ஆணைகள் வழங்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.