காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் ஜெ. அறிவிப்பு!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.

இன்று (28ஆம் தேதி) நடைபெற்ற காமன்வெல்த் 4வது நாள், விளையாட்டுப் போட்டியில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் வேலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சதீஷுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.