மூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

"கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதங்களில் வெளியிடப்படும்" என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன்
தெரிவித்தார்.


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், நீர்வள ஆதாரத் துறை, பொதுப்பணித் துறைகளில், 98 உதவி பொறியாளர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு, சென்னையில், 50 மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும், 176 மையங்களில் நடந்தது.

காலையில், துறைகள் சார்ந்த (விருப்ப பாடம்) எழுத்து தேர்வும், மதியம், பொது அறிவுக்கான தேர்வுகளும் நடந்தன. 98 இடங்களுக்கு, 53 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.


சென்னையில், தேர்வு நடந்த மையங்களை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் (பொறுப்பு) ஆய்வு செய்தார். பின் நிருபர்களிடம் கூறுகையில், &'&'இரண்டு தேர்வுகளிலும், விண்ணப்பதாரர் பெறும் மொத்த மதிப்பெண் அடிப்படையில், நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த வாரம் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வு முடிவுகள், மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும்" என்றார்.