வருமான வரி செலுத்தாதவர்களுக்கு விரைவில் நோட்டீஸ்

(நோட்டீஸ் அனுப்பிய பிறகு நடவடிக்கைகள் கடுமை யாக இருக்கும். அதன் விளைவு கள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம்)
வருமான வரி செலுத்தாதவர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று வருமான வரி தலைமை ஆணையர் எஸ்.ரவி
கூறியுள்ளார்.
சென்னை வருமான வரி தலைமை ஆணையர் (எண்-1) எஸ்.ரவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
நடப்பு நிதி ஆண்டுக்கு இதுவரை வருமான வரி செலுத்தாதவர்களும், ரிட்டன் கணக்கு சமர்ப்பிக்காதவர்களும் விரைவில் தங்கள் பணியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக வங்கிகள் சனி, ஞாயிறு செயல் படும். வருமான வரியை ஆன் லைன் மூலமாகவும் (-பேமன்ட்) செலுத்தலாம்.

ரிட்டன் கணக்கு சமர்ப்பிப் பவர்களின் வசதிக்காக வரு மான வரி அலுவலகங்களும் சனி, ஞாயிறு விடுமுறை நாட் களிலும் இயங்கும். அதிக மதிப் பிலான பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை வருமான வரித்துறை உன்னிப்பாக கண் காணித்து வருகிறது. அத்தகைய நபர்கள் உடனடியாக வருமான வரி செலுத்திவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். நோட்டீஸ் அனுப்பிய பிறகு நடவடிக்கைகள் கடுமை யாக இருக்கும். அதன் விளைவு கள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.