தமிழகத்தில் நாளை 2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு, 43,051 மையங்கள் மூலம், நாளை 2வது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஜனவரி 19ம் தேதி மற்றும் பிப்ரவரி 23ம் தேதி
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2ம் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்கள் உள்பட 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


சொட்டு மருந்து வழங்கும் மையம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டாம் தவணையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து டுக்கப்படுகிறது. சென்னையில் மாநகராட்சி சார்பில் 2ம் கட்ட தவணையாக நாளை சென்னை முழுவதும் 1,325 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.