டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு,

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து
கொண்டது

இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர். பின்பு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஏற்கெனவே முடிவின் படி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை
சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து இன்றும், நாளையும் மனு கொடுக்க இருந்தனர்.

இதையடுத்து இன்று அதிகாரிகள் சந்திப்பு நடந்தது, நாளை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இன்றைய சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் உடன் இருந்தது.