திருச்சி மாநகரில் இன்று புதிய ( UTO ) UNION OF TEACHERS ORGANIZATION இயக்க கூட்டமைப்பு உதயம்

இன்று திருச்சி மாநகரில்  ( UTO ) UNION OF TEACHERS  ORGANIZATION  இயக்க கூட்டமைப்பு உதயம். இடைநிலை ஆசிரியர்களின்  கோரிக்கைகளுக்குகாக மட்டுமே உருவாக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்களின் கூட்டம் ஹோட்டல்
அருண் ,மத்திய பேருந்து நிலையம் அருகில் திருச்சியில் நடைபெற்று
முடிந்தது .கூட்டத்தில்

*தமிழக ஆசிரியர் மன்றம் (TAM).

*ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (JSR)

*தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA).

*தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் (TAAS).
  
*ஆசிரியர் முன்னேற்ற சங்கம் (AMS).
ஆகிய 5சங்கங்கள் பங்கெடுத்தன
#முடிவுகள்#
*இக்கூட்டமைப்பு "ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு"
UNION OF TEACHERS ORGANIZATION -('U'TO) என அழைக்கப்படும் .
U'TO தலைமை தொடர்பாளராக
திரு .ஜெகநாதன் ,
பொதுச்செயலாளர் ,
ஜே.எஸ்.ஆர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி .
நிதிக்காப்பாளராக
திரு.தே.தயாளன் ,
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம்.
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர
கோரிக்கைகள்
1). நடுவண் அரசுக்கு இணையான 9300+4200 அடிப்படை ஊதியத்தை
தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு  வழங்க வேண்டும்

2). ஆசிரியர்கள்-அரசூழியர்களின் எதிர்காலத்தை இருண்டகாலமாக்கும்
தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் கைவிட்டு பழைய ஓய்வூதிய முறையே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


தீர்மானம்

1)ஒத்த கருத்துடைய ஆசிரியர் இயக்கங்கள் இந்த UTO  இயக்க கூட்டமைப்பில் சேர  அன்பான அழைப்பு.

இவண் -( UTO ) UNION OF TEACHERS  ORGANIZATION  இயக்க கூட்டமைப்பு