உங்கள் கருத்தென்ன?-Kipson Tata

 இடைநிலை ஆசிரியர்களைத் தவிர பிற ஆசிரியர்களை போராட்ட களத்திற்கு ஈர்ப்பதற்காக 2 கோரிக்கை 7 கோரிக்கை ஆனதாகச் சொல்வதை ஏற்க முடியாது.

கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது அரசு நிதிச்
செலவினமில்லாத அல்லது நிதிச் செலவினம் குறைவாக ஆகுகின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறி போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்.

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் இதனால் புறக்கணிக்கப்படும். உயிருக்கு போராடும் ஒருவரை அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தலைவலிக்கு சிகிச்சையளிப்பதைப் போல் கூட்டுப் போராட்டத்தின் செயல்பாடுகள் பயனற்றுப்போய்விடும்.

இடைநிலை ஆசிரியர் கோரிக்கைகளுக்காக மட்டும் நாங்கள் போராட வர மாட்டோம் என பிற ஆசிரியர்கள் கூறினால் அவர்களை வர வைப்பது இயக்கங்களின் வேலை அதை விடுத்து போராட்டத்திற்கு வர வைப்பதற்காக ஒவ்வொரு பதவிக்கும் ஒரு கோரிக்கை என்பது யாரை ஏமாற்றும் வேலை?

பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையா? அல்லது பிற ஆசிரியர்களையா?

கோரிக்கைகளில் தெளிவில்லாமல் எந்த கோரிக்கையும் வெல்லாது.


Kipson Tata