• 7:52 PM
  • www.tntam.in
மாற்றுத்திறனாளிகள் வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க முடியு மா? என்ற சந்தேகம் பலருக்கு எழுகிறது. இதுபற்றி வட்டார போக்கு வரத்து
அலுவலக அதிகாரிகள் அளித்த விளக்கம் இங்கே… மாற்றுத் திறனாளி முதலில் அரசு மருத்துவ ரிடம் மாற்றுத் திறனாளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றித ழில், அவர் எத்தனை சதவீதம் குறை பாடுகள் கொண்டவர் என்பது கட்டா யம் இருக்கவேண்டும்.?

மாற்றுத்திறனாளி முதலில் அரசு மரு த்துவரிடம் மாற்றுத் திறனா ளிக்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். சான்றிதழில், அவர் எத்தனை சதவீதம் குறைபாடு கள் கொண்டவர் என்பது கட்டாயம் இருக்கவேண்டும். நாற்பது சதவீதத்துக்கும் கீழ் மாற்று திறனாளியாக இருப்பவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் சில விதி கள் உண்டு.

முதலில் அவர் வாகனத்தை போக்கு வரத்து துறை அதிகாரிக ள் முன்பு ஓட்டிக்காட்ட வேண்டு ம். சிக்னல் அல்லது வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், அவ ரால் கால் ஊன்றி பேலன்ஸ் செய்து நிற்க முடிகிறதா? வாகனத் தின் எடையை அவரால் தாங்கிக் கொள்ள முடிகிறதா? என்பதற் காகத்தான் இந்த டெஸ்ட்டுகள். இந்த டெஸ்ட்டுகளில் பாஸ் ஆன பின்புதான் பழகுனர் உரிமம் வழ ங்கப்படும். இந்த விதிமுறை கள் நான்கு சக்கர வாகன ங்களுக் கும் பொருந்தும்.

நாற்பது சதவீதத்துக்கு மேல் குறைபாடுகள் உள்ள மாற்று திற னாளிகள், இரண்டு சக் கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்ட விரும்பி னால், அராய் (ஏ.ஆர்.ஏ.ஐ) அனுமதி வாங்கிய நிறுவனங்களில், அவர்கள் சுலபமாக வாகனம் ஓட்டுவதற்கு ஏற்றது போல எளி மையாக மாற்றங்கள் செய்து கொண்டுவர வேண்டும். அப்படி மாற்றி அமைத்த வாகனங்களில் கூடுதலாக ஏதாவது பாகம் அவர்க ள் வசதிக்காக சேர்த்து இருக்கலா மே தவிர, வாகனத்தில் உள்ள எந்த பாகத்தையும் நீக்கி இருக்கக் கூடாது.

இரண்டு சக்கர வாகனங்களை அராய் அனுமதி அல்லாமல், வேறு எங்கா வது மெக்கானிக் செட்டில் மாற்றி அமைத்து வந்தால், கண்டிப் பாக அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. அராய் அனுமதி வாங்கிய எந்த நிறுவனம் வாகனத்தை மாற்றி அமைத் ததோ அந்த நிறுவனத்திடம் சான்றிதழ் பெற்று வருவது அவசியம். வாகனம் வாங்கும் போதே மாற்றுத் திறனாளியின் பெயரில் தான் வாங்கி இருக்க வேண்டு ம். லைசென்ஸ் கொடுக்கும்போது வாக னத்தின் எண் குறிப்பிட்டுத்தான் லைசெ ன்ஸ் வழங்கப்படும்.

அந்த வாகனத்தை தவிர, வேறு வாகன த்தை அவர்கள் ஓட்டக் கூடாது. மாற்று த்திறனாளியின் கை, கால்களில் எந்த குறைபாடு களும் இல்லாமல், காது மட்டும் கேட்காமல் இருந்தாலும் லைசென்ஸ் வழங்கப்பட மாட் டாது. ஆனால், கருவி பொருத்தினால் கேட்கும் திறன் இருக்கும் என்றால், அவர்களுக்கும் சில சோதனைகள் செய்த பின்பு லை சென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸில் இவர்கள் காதுகேட்கும் கருவி பொருத்தியவர் என்பதும் குறிப் பிடப்படும்.


நன்றி தினகரன்

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive