2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது.

அரை காசு சம்பளம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும்என்று சொல்வார்கள். அத்தகைய அரசு பணியில்இன்று சேர இளைஞர்களிடையே பலத்தபோட்டி நிலவுகிறது.
அரசு பணியாளர் தேர்வாணையம்,எந்த ஒரு தேர்வை அறிவித்தாலும்லட்சக்கணக்கானோர் போட்டிபோட்டு விண்ணப்பித்து டிஎன்பிஎஸ்சியை திணற செய்கின்றனர். 10ம் வகுப்புதான் கல்வி தகுதி என்றாலும் பட்டதாரிகள் படையெடுக்கின்றனர்.

ஆனால் தேர்வு செய்யப்படுபவர்கள்என்னவோ ஆயிரத்துக்கு உள்ளாகத்தான் இருக்கும்.அரசு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர்காத்திருப்பது ஒருபக்கம், ஆசிரியர் பணி, அரசு ஊழியர் பணி என்று லட்சக்கணக்கான காலியிடங்கள்மறுபக்கம் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.இவை ஒருபுறம் இருக்க வரும் ஆறு மாத காலத்திற்குள் அதாவது 2014 மார்ச் 31ம் தேதிக்குள் தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதியகாலி பணியிடங்கள் உருவாக இருக்கிறது நடப்பு நிதியாண்டு நிறைவு பெறும்போதுஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்று சீருடை பணியாளர்கள் தவிர்த்து மாதத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் வீதம் என ஒட்டுமொத்தமாக சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் ஓய்வு பெற இருக்கின்றனர்என்கிறது ஒரு புள்ளி விபரம். தமிழகத்தில் 1980 முதல் 1984 வரை அதிக அளவில் பணி நியமனங்கள் நடந்தன. 

மேலும் 1984ல்எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் யூத் சர்வீஸ்என்றபெயரில் சிறப்பு தேர்வு ஒன்று நடத்தப்பட்டு தற்காலிகமாக பணியாற்றிய ஆயிரக்கணக்கானோர் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1984க்கு பிறகு அடுத்து வந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக அளவில் பணி நியமனங்கள் ஏதும் நடைபெறவில்லை. பின்னர் 1989ல் இருந்து பணி நியமனங்கள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் நடந்தன. அவ்வாறு 1984 வரை நியமனம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் 58 வயதை நெருங்கியுள்ளதால் நடப்பு நிதியாண்டுடன் ஓய்வுபெற உள்ளனர்.


அரசு துறைகளில் ஏ, பி, சி, டி என்று 4பிரிவுகளில் ஆபீசர் நிலையில் உள்ளவர்கள் முதல் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்கள் வரை தமிழகத்தில் 13.30 லட்சம் பேர் வேலைபார்க்கின்றனர். சி மற்றும் டி பிரிவுகளில் ஊழியர்கள் வரும் நாட்களில் அதிகம் ஓய்வுபெறஉள்ளனர். மொத்த பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் ஓய்வுபெற உள்ளதால் ஏற்கனவே பணி பளுவுடன் செயல்படுகின்ற ஊழியர்கள் மேலும் பணி பளுவில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளன. மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அரசு துறைகளில் கூடுதல் பணியிடங்கள்உருவாக்கப்படவில்லை.

மாறாக பணியிடங்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைக்கப்படுகிறது. கணினிமயம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் இதற்கு முன்வைக்கப்படுகிறது. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஏற்ப புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படாதது நீண்டகால குறையாக இருந்து வருகிறது. வருடத்திற்கு 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் வரை ஓய்வுபெற்று வந்த நிலை மாறி இப்போது 2 லட்சம் ஊழியர்கள் வரை வருடத்திற்கு ஓய்வுபெறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.