• 7:28 PM
  • www.tntam.in
சென்னை : கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் அருமைநாதன் நேற்று தனியார் பள்ளி கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத் தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது விசாரணை நடத்தி அந்த பள்ளிகள் பெற்ற கூடுதல் கட்டணத்தை திரும்ப பெற்றுத் தருவது மட்டும் போதாது. அந்த பள்ளிகளின் நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கமிட்டி பரிந்துரை செய்ய வேண்டும் என்று கட்டண கமிட்டியில் தெரிவித்துள்ளோம். மேலும், சில சிறுபான்மை பள்ளிகள் கட்டண கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெற்று வந்துள்ளனர். இதை கட்டண கமிட்டி எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டோம். கோர்ட் உத்தரவில் தலையிட முடியாது என்று கட்டண கமிட்டி கூறுகிறது. இது குறித்து விரை வில் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அருமை நாதன் தெரிவித்தார்.

இந்த பிரச்னை குறித்து கட்டண கமிட்டியின் தலைவர் நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது: கட்டண கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணம் போதாது என்று கூறி 13 சிறுபான்மை பள்ளிகள் நிர்வாகத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீது விசாரணை செய்த நீதிமன்றம், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 139 பத்தியில் கூறப்பட்டுள்ள ஒரு ஆசிரியருக்கு 30 மாணவர்கள் என்ற விதியை கட்டணம் நிர்ணயம் செய்யும் போது பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. அதை நாங்கள் மீறினால் கோர்ட் அவமதிப்பாகிவிடும்.


அதனால், கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் மீது பரிவு அடிப்படையில் நிதி ஆதாரம் உள்ள பள்ளிகள் தாங்களாகவே முன்வந்து அந்த மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கலாம். அல்லது அவர்களுக்காக உதவி செய்ய வேண்டும் என்று கட்டண கமிட்டியின் சார்பில் தெரிவித்துள்ளோம். இது தவிர 3ம் தேதி பள்ளிகள் திறந்த பிறகு குறிப்பிட்ட பள்ளிகளில் ஆய்வு செய்து, ஒரு வகுப்புக்கு குறைந்த பட்சம் 40 மாணவர்கள் இருக்கும் வகையில் செய்ய உத்தரவிட்டுள்ளோம். கட்டணம் நிர்ணயிக்கும் போது பெற்றோரிடம் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு கமிட்டி தீர்மானம் போட வேண்டும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive