முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்படுமா? 30-ந் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 150-ல் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு
கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் முடிவை தெரிவிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மறுதேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வருகிற 30-ந் தேதி தீர்ப்புக்காக வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.