இடைநிலை ஆசிரியர்கள் தற்போது - தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன்

இடைநிலை ஆசிரியர்கள் தற்போது Rs.14ஆயிரம் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார்


Rs.24 ஆயிரம் வரை ஊதியம்பெறுகிறார்கள். தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினாலும் அதிகபட்சம்

Rs.20 ஆயிரத்து 200க்கு மேல் சம்பளம் பெற முடியாத நிலை உள்ளது.
இந்த பாகுபாட்டை போக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாளை (30 ம்தேதி) மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடக்கிறது. நாகக்கல்லில் நாளை காலை 10 மணிக்கு தாசில்தார் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து ஊதிய உயர்வு அளிக்கவேண்டும். கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர் சங்கங்களை நேரில் அழைத்து பேசவேண்டும்.
இவ்வாறு முன்னாள் பொதுச்செயலாளர் முருகசெல்வராசன் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட செயலாளர் தங்கவேல், மாவட்டபொருளாளர் கலைச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளை மாநிலம் முழுவதும் மறியல்